புதுமை பெண்கள் -கவிதைகள்
பெண் எனும் பிரபஞ்சம் ஓய்வுக்காலம் என்றில்லை பெண்மைக்கு ஓய்வூதியம் தேவையில்லை ! ஒளிர்ந்துவரும் சூரியக்குடும்பம் ஓய்வெடுக்க நின்றுவிட்டால் உலகில் உயிர் வாழ வழி இல்லை . அடுக்கரையில் ஓரிடமாய் நின்றபடி அன்புக்கொண்ட குடும்பத்தாரை ஆற்றலினால் சுழல வைக்கும் ஆதவனின் அம்சம் . பெண் . அமைதிக்கொண்ட முழுமதியாய் இருளினை ஒழித்திட்டு இல்லத்தில் ஒளி சேர்க்கும் பேரழகு பெட்டகம் , பெண் . அழகு மிகுதியால் ஆடவரை கனவுலகில் மிதக்கவைக்கும் அண்டம் ,பெண் . அத்துமீறும் ஆண்களையும் அச்சமின்றி பொசுக்கிடும் அக்னி பிழம்பு, பெண் . பிறந்த வீட்டு படித்தாண்டி பிரியமுடன் ஓடிச்சென்று புகுந்த வீடு புகுந்திடும் நீரோடைப் பெண் . மகப்பேறு தான் தந்து பூமாதேவியாக மனிதனை மண்ணில் ஏந்திடுவாள் , பெண் . இருக்கும்போது இவள் அருமை தெரியாது இல்லையெனில் மனிதன் வாழ முடியாது காற்றைப் போல இரண்டற வாழ்வில் கலந்திட்ட கலங்கரை விளக்கு , பெண் . பஞ்சபூத சக்தியாய்...
Comments
Post a Comment