புதுமை பெண்கள் -கவிதைகள்





பெண் எனும் பிரபஞ்சம்

ஓய்வுக்காலம் என்றில்லை பெண்மைக்கு 
ஓய்வூதியம் தேவையில்லை ! 
ஒளிர்ந்துவரும் சூரியக்குடும்பம் 
ஓய்வெடுக்க நின்றுவிட்டால் 
உலகில் உயிர் வாழ வழி இல்லை . 

அடுக்கரையில் ஓரிடமாய் நின்றபடி 
அன்புக்கொண்ட குடும்பத்தாரை 
ஆற்றலினால் சுழல வைக்கும் 
ஆதவனின் அம்சம் . பெண் . 

அமைதிக்கொண்ட முழுமதியாய் 
இருளினை ஒழித்திட்டு 
இல்லத்தில் ஒளி சேர்க்கும் 
பேரழகு பெட்டகம் , பெண் . 

அழகு மிகுதியால் 
ஆடவரை கனவுலகில் மிதக்கவைக்கும் 
அண்டம் ,பெண் . 

அத்துமீறும் ஆண்களையும் 
அச்சமின்றி பொசுக்கிடும் 
அக்னி பிழம்பு, பெண் . 

பிறந்த வீட்டு படித்தாண்டி 
பிரியமுடன் ஓடிச்சென்று 
புகுந்த வீடு புகுந்திடும் 
நீரோடைப் பெண் . 

மகப்பேறு தான் தந்து பூமாதேவியாக 
மனிதனை மண்ணில் 
ஏந்திடுவாள் , பெண் . 

இருக்கும்போது இவள் அருமை தெரியாது 
இல்லையெனில் மனிதன் வாழ முடியாது 
காற்றைப் போல இரண்டற வாழ்வில் 
கலந்திட்ட கலங்கரை விளக்கு , பெண் . 

பஞ்சபூத சக்தியாய் 
பிரபஞ்சத்தின் வடிவமாய் 
பூவுலகில் வாழ்பவள் , பெண் . 



புரட்சி பெண்

நீ பிறப்பிக்க பிறந்த 
பூமியின் பிரம்மா , 
உயிர்களுக்கு மட்டும் அல்ல , 
உலகை ஆளும் உன்னத சக்தி , 
நீ இல்லையேல் உலகம் உண்டோ ! 

வீட்டுக்கிளியே , 
கூண்டை விட்டு வெளியே வா , 
சுந்தந்திர காற்றை சுவாசிக்க பார் , 
அனுபவங்கள் உனக்கு பாடமாகும் , 
உனக்கும் ஆயிரம் வாய்ப்புகள் கொட்டி கிடக்கு ! 

புரட்சி பெண்ணே உன் புன்னகை போதும் 
பூமியை வென்றுகாட்ட , 
அடிமை சட்டங்களை உடைத்தெறி , 
ஆனவக்காரர்களை அடக்க முயற்சி , 
தீயவர்களை திருத்தி , 
நல்லவர்களுக்கு நிம்மதி கொடு ! 

மிரட்டும் வறுமையை 
துணிவால் துறத்து, 
கயவர்களின் கையில் 
காசுக்காக கசந்காதே , 
நீ புனிதத்தின் பிறப்பு , 
அறிவியலுக்கு இன்றுவரை 
விளங்கமுடியாத வியப்பு நீ ! 

விதவை பெயரில் , 
விளங்காத விளையாட்டு , 
பசுமை நிலத்தை 
பாலைவனமாக்கும் கொடுமை முயற்சி , 
உன் மன குமுறல்கள் எரிமலைக்கும் மேல் , 
வெடித்து சிதறு , 
உலகம் உன்னை பார்த்து பயம் கொள்ளும் ! 

மாதர் பிறப்பரியா மண்ணுலகம் , 
ஈன்ற உடனே உனக்கு கள்ளிப்பால் கலாசாரம், 
உன்னோடு ஓருயிர் போகவில்லை , 
உன் தலைமுறைகளில் ஓராயிரம் 
உயிர்களை கொள்ளும் கொடுமைக்கார 
தலைகளை கொன்று குவி , 
சாதனைகளின் சரித்திரத்தில் , 
தலைமகன்களை தாண்டிக்காட்டு ! 

நீ ஒன்றும் குப்பையல்ல , 
ருசித்து விட்டு கசக்கி போடா , 
சாலயோர குப்பைகளில் 
பெண் குழந்தையின் சடலம் அல்லவா 
கலந்து கிடக்கு , 
என்ன கொடுமை இதற்க்கு மேல் வேண்டும் ! 

குழந்தையில் தப்பித்து 
குமரியாய் மலர்ந்தால் , 
கொடுமைகள கோடி, 
உடைகளை சல்லடை போடா ஓராயிரம் கண்கள் , 
உன்னை ஏளனப்பார்வையில் பார்க்கும் 
சமுதாயத்தை தீயிட்டு கொளுத்து , 
உன் பிறவியை குருடாக்கும் , 
வரதட்சணை பேயை விரட்டி அடி , 
விளைவிக்க பிறந்த புண்ணிய பூமி நீ , 
நீ என்றும் வரதட்சணை என்னும் விலை போகாதே ! 

சுகத்தின் எச்சங்களாய் , 
சோம்பலின் உச்சமாய் , 
பெண் பிள்ளைகளை கொலை செய்யும் , 
ஆயுதமில்லா வன்முறை கொடுமை , 
பொருத்தது போதும் பெண்ணே 
இனியும் பொறுமை வேண்டாம் , 
பொங்கி ஏழு , 
இந்த நிலை தொடர்ந்தாள் 
பொன்னிலமாய் இருந்த பெண்ணினம் , 
வரண்டுப்போய் சுவடுகள் இல்லாமல் ! 


புதுமைப் பெண்

போற்றி போற்றி!ஓர் ஆயிரம் போற்றி!நின்
பொன்ன டிக்குப்பல் லாயிரம் போற்றி காண்!
சேற்றி லேபுதி தாக முளைத்த தோர்
செய்ய தாமரைத் தேமலர் போலொளி
தோற்றி நின்றனை பாரத நாட்டிலே;
துன்பம் நீக்கும் சுதந்திர பேரிகை
சாற்றி வந்தனை,மாதரசே!எங்கள்
சாதி செய்த தவப்பயன், வாழி நீ!

மாதர்க் குண்டு சுதந்திரம் என்றுநின்

வண்ம லர்த்திரு வாயின் மொழிந்தசொல்
நாதந் தானது நாரதர் வீணையோ?
நம்பிரான் கண்ணன் வேய்ங்குழ லின்பமோ?
வேதம் பொன்னுருக் கன்னிகை யாகியே
மேன்மை செய்தெமைக் காத்திடச் சொலவதோ?
சாதல் மூத்தல் கெடுக்கும் அமிழ்தமோ?
தையல் வாழ்கபல் லாண்டுப்ல லாண்டிங்கே!

அறிவு கொண்ட மனித வுயிர்களை
அடிமை யாக்க முயல்பவர் பித்தராம்;
நெறிகள் யாவினும் மேம்பட்டு மானிடர்
நேர்மை கொண்டுயர் தேவர்க ளாதற்கே,
சிறிய தொண்டுகள் தீர்த்தடி மைச்சுருள்
தீயி லிட்டுப் பொசுக்கிட வேண்டுமாம்;
நறிய பொன்மலர் மென்சிறு வாயினால்
நங்கை கூறும் நவீனங்கள் கேட்டிரோ!

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி,இவ் வையம் தழைக்குமாம்;
பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப் 
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;
நாணும் அச்சமும் நாட்கட்கு வேண்டுமாம்;
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்கடிப் பெண்ணின் குணங்களாம்;
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுக்கள் கேட்டிரோ!

நிலத்தின் தன்மை பயிர்க்குள தாகுமாம்;
நீசத் தொண்டும் மடமையும் கொண்டதாய்
தலத்தில் மாண்புயர் மக்களைப் பெற்றிடல்
சால வேயரி தாவதொர் செய்தியாம்;
குலத்து மாதர்க்குக் கற்பியல் பாகுமாம்;
கொடுமை செய்தும் அறிவை யழித்துமந்
நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்;
நங்கை கூறும் வியப்புக்கள் கேட்டிரோ!

புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும்
பொய்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச்
சதும றைப்படி மாந்தர் இருந்தநாள்
தன்னி லேபொது வான வழக்கமாம்;
மதுரத் தேமொழி மங்கைய் உண்மைதேர்
மாத வப்பெரி யோருட னொப்புற்றே
முதுமைக் காலத்தில் வேதங்கள் பேசிய
முறைமை மாறிடக் கேடு விளைந்ததாம.

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின் றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்ன உரைப்பது கேட்டிரோ!

உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்,
ஓது பற்பல நூல்வகை கற்கவும்,
இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே
திலக வாணுத லார்நங்கள் பாரத
தேச மோங்க உழைத்திடல் வேண்டுமாம்;
விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பராம்.

சாத்தி ரங்கள் பலபல கற்பராம்;
சவுரி யங்கள் பலபல செய்வராம்;
மூத்த பொய்மைகள் யாவும் அழிப்பராம்;
மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம்;
காத்து மானிடர் செய்கை யனைத்தையும்
கடவு ளர்க்கினி தாகச் சமைப்பராம்;
ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்;
இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டிரோ;

போற்றி,போற்றி!ஜயஜய போற்றி!இப்
புதுமைப் பெண்ணொளி வாழிபல் லாண்டிங்கே!
மாற்றி வையம் புதுமை யுறச்செய்து
மனிதர் தம்மை அமரர்க ளாக்கவே
ஆற்றல் கொண்ட பராசக்தி யன்னை,நல்
அருளி னாலொரு கன்னிகை யாகியே
தேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள்
செல்வம் யாவினும் மேற்செல்வம் எய்தினோம்.!

Comments

Popular posts from this blog

பெண் கல்வி

Women and Culture